2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

உலக தமிழ் பூப்பந்தாட்ட தொடர்

Janu   / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்ட தொடர் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக உள்ளக அரங்கில் பூப்பந்தாட்ட தொடருக்கான ஆரம்ப நிகழ்வு புதன்கிழமை (31) நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார்.

12 நாடுகளைச் சேர்ந்த 514 வீர, வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியுள்ள ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 33 பிரிவுகளின் கீழ் இந்த போட்டிகள் நடைபெறுவதுடன், சர்வதேச வீரர்களுக்கான பிரிவும் இம்முறை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .