Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 26 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன், பு. கஜிந்தன்
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108ஆவது பொன் அணிகள் சமர் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் போட்டியானது வியாழக்கிழமை (27) ஆரம்பித்து மூன்று நாள்களுக்கு சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சென். பற்றிக்ஸ் கல்லூரி 175வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வாண்டு பொன் அணிகளின் போரின் வரலாற்றில் முதன் முறையாக மூன்று நாள்கள் போட்டியாக இது நடைபெறவுள்ளது.
இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் சென். பற்றிக்ஸ் கல்லூரி 35 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 31 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டது.
இப்போட்டியின் தொடர்ச்சியாக 32ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டி மார்ச் எட்டாம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கும், பிரான்சிஸ் யோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான ஐந்தாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி மார்ச் 12ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களை கொண்ட ஒரு நாள் போட்டியில் 23 தடவைகள் சென். பற்றிக்ஸ் கல்லூரியும் 7 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி இடைநிறுத்தப்பட்டது.
இருபதுக்கு- 20 போட்டிகளில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மூன்று தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
28 minute ago
42 minute ago