2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

6 வருட சிறைவாசத்துக்கு பின் காலிதா விடுதலை

Editorial   / 2024 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் ஏதிர்க்கட்சி தலைவியாக இருந்த 78 வயதான கலிதா ஸியா தற்பொழுது சிறையில் இருக்கிறார் காலிதா ஸியாவை ஊழல் வழக்கொன்றில் 17 வருட சிறைத்தண்டனை விதித்து 2018ல் சிறையில் அடைத்தார் பிரதமர் ஷேக் ஹஸீனா.

1977 முதல் 1981 வரை பங்களாதேஷின் ஜனாதிபதியாக இருந்த காலிதா ஸியாவின் கணவர் ஸியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பின்னர் காலிதா ஸியாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது.

1978 இல் பங்களாதேஷ் தேசிய வாதக் கட்சியை நிறுவினார். அதனூடாக அவர் 1991 இல் பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரானார்.

1991-1996 மற்றும் 2001-2006 வரை பங்களாதேஷ் பிரதமராக பதவி வகித்தார். உலகின் #முதலாவது முஸ்லிம் பெண் பிரதமர் - பேகம் காலிதா ஸியா என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் இருக்கும் அவரை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி சஹாப்தீன் அதிகாரிகளை பணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .