Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூன் 09 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியாவில் 45 வயதுப் பெண்ணை 16 அடி நீள மலைப்பாம்பு ஒன்று விழுங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள கலேம்பாங் கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபரிதா. 45 வயதான இவர், தன் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் 6ஆம் திகதி இரவு ஃபரிதா, வீடு திரும்பாததை அடுத்து, அவரது கணவர் எல்லா இடத்திலும் தேடியுள்ளார். இந்தச் செய்தி அந்தக் கிராமத்திலும் பரவியதால் அவருடன் இணைந்து மக்களும் தேடியுள்ளனர்.
இந்த நிலையில், ஃபரிதாவின் உடைமைகளை அவரது கணவர் நேற்று கண்டுபிடித்துள்ளார். இது, அவருக்கு சந்தேகத்தை அளித்ததைத் தொடர்ந்து ஊர் மக்கள் உதவியுடன் அந்த இடத்தைத் தொடர்ந்து தேடியுள்ளார். அப்போது, அவர்கள் பெரிய வயிற்றுடன் 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று படுத்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய பார்வையில் பாம்பின் வயிறு கிழித்துப் பார்க்கப்பட்டது. அதில் ஃபரிதா உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அந்நாட்டில் அதிகமாக நிகழ்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, தென்கிழக்கு சுலவேசியின் டினாங்கியா மாவட்டத்தில் எட்டு மீற்றர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று விவசாயி ஒருவரைச் சாப்பிட்டதாகவும், 2018ஆம் ஆண்டு, தென்கிழக்கு சுலவேசியின் முனா நகரில் ஏழு மீற்றர் நீளமுள்ள மலைப்பாம்பு 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை விழுங்கியதாகவும், 2017இல், மேற்கு சுலவேசியில் நான்கு மீற்றர் நீளமுள்ள மலைப்பாம்பு விவசாயி ஒருவரை விழுங்கியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago