2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

400 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

Simrith   / 2024 மே 12 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் கூடுதல் உபகரணங்களை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து 50.6 பில்லியன் டொலர்கள் உட்பட, ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் தொடக்கத்திலிருந்து உக்ரைனுக்கு 51.3 பில்லியன் டொலர் இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது என்று பாதுகாப்புத் துறை செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

வெள்ளிக்கிழமை தொடங்கிய புதிய தரைத் தாக்குதலில் வடக்கு உக்ரைன் ரஷ்யாவால் தாக்கப்பட்ட அதே நாளில் அமெரிக்காவின் புதிய உதவி ஒன்று வழங்கப்பட்டது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் அருகே உள்ள எல்லை நகரமான வோவ்சான்ஸ்க்கை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் ரஷ்யாவின் மிகக் கடுமையான எல்லை தாண்டிய தரைவழித் தாக்குதல் என்று உக்ரேனிய இராணுவ ஆதாரத்தை மேற்கோள் காட்டி CNN அறிக்கை கூறுகிறது.

X இல் புதிய ஆயதங்களுக்காக அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்த உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்த தாக்குதல் ரஷ்யாவின் "ஒரு புதிய எதிர் தாக்குதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். மேலும் கடுமையான போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது" என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .