2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா

Freelancer   / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் 27 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டில் உலக நாடுகளை துவம்சம் செய்தது கொரோனா வைரஸ். கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை கோடியை தாண்டியது. இன்றளவும் ஒரு சில நாடுகளில் கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளை ஆட்டுவிக்க ஆரம்பித்து உள்ளது. கிட்டத்தட்ட பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போலந்து, நோர்வே, சீனா, உக்ரைன், போர்த்துகல் ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது.

அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை திரிபு குறித்து பிரிட்டனில் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜெர்மனியில் தான் இந்த திரிபு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 3 கண்டங்களில் 27 நாடுகளில் பரவி உள்ளது. உலகின் மற்ற நாடுகளுக்கு மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மனித உடலில் xec கொரோனா திரிபு தாக்கினால் அதன் அறிகுறிகள், மற்ற வகை கொரோனா பாதிப்பின் போது ஏற்படுவது போலவே, காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்றவை காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதிய வகை கொரோனா திரிபின் தன்மை மற்றும் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மருத்துவ நிபுணர்கள் கூறி இருக்கின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .