Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றமொன்று மதபோதகர் ஒருவருக்கு 1075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்பளித்துள்ள சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது.
‘அட்னான் ஒக்டர்(‘Adnan-oktar) என்ற நபருக்கே கடந்த ஜனவரி மாதம் இஸ்தான்புல் நீதிமன்றத்தினால் இத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மீது ”தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பியமை, சிறுவர் மற்றும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை புரிந்தமை, மோசடி உள்ளிட்ட 10 வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
64 வயதான குறித்த நபர் நீதிமன்ற விசாரணையின் போது தனக்கு 1,000 காதலிகள் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் இதனையடுத்து அவரது வீட்டை பொலிஸார் சோதனை செய்த போது 69,000 கருத்தடை மாத்திரைகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து வருவதாகவும், இதனால் குறித்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் குறித்த நபர் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை நிராகரித்து, ஹாருன் யாஹ்யா என்ற புனைப்பெயரில் 'The Atlas of Creation' என்ற தலைப்பில் 770 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
8 hours ago