Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 04 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு சொந்தமான சொகுசு விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
இந்த விமானம் மோசடியாக வாங்கப்பட்டு அமெரிக்காவிலிருந்து கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்படி விமானம் டொமினிகன் குடியரசில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதன் பெறுமதி இலங்கை ரூபாயில் 400 கோடி என தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டின் பிற்பகுதி மற்றும் 2023 ஆம் ஆண்டின் முற்பகுதிக்கு இடையில், மதுரோவுடன் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து இந்த சொகுசு விமானத்தை வாங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .