Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஒக்டோபர் 02 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை ஈரான். செவ்வாய்க்கிழமை (01) நள்ளிரவில் தொடங்கியது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட சர்வதேசத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. உடனடியாக பொதுமக்களுக்கு சமிக்ஞை ஒலி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கி விட்டது
ஈரானின் இந்த ஏவுகணை தாக்குதல்கள் மூலமாக மத்திய கிழக்கில் சமீப நாட்களாக எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் நிஜமாகியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேலுக்கு முன்பே எச்சரித்திருந்த அமெரிக்கா, ஈரானின் ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு உதவி புரிந்ததாக கூறியுள்ளது.
பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பதில் தாக்குதலில் ஈடுபட்டால் மேலும் தாக்குதல் தொடுப்போம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இது ஈரான் புரட்சிகர காவல் படையின் முதல் தாக்குதல் என்று ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கமிட்டி தலைவர் இப்ராகிம் அஸிஸி தெரிவித்துள்ளார்.
"இஸ்ரேலின் ராணுவ மையங்கள் மற்றும் தளவாடங்களே எங்கள் இலக்காக இருந்தன. கணிப்புகள் ஒருவேளை தவறானால் பொதுமக்களும் கூட பாதிப்புகளை சந்திக்கும் நிலையும் வரலாம். இஸ்ரேல் மீண்டும் தவறிழைத்தால் அடுத்தக்கட்டமாக இரண்டாவதாக நடத்தப்படும் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட படியே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் இனி என்ன செய்யப் போகிறது? மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க ராணுவம் என்ன செய்கிறது? மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதற்றம் உலகளாவிய அளவில், குறிப்பாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? உள்ளிட்ட விடயங்கள் கேள்வியை ஏற்படுத்தியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago