Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரோக்கோ காற்பந்து அணியைச் சேர்ந்த பிரபல காற்பந்து வீரரான அசரப் தனது 19 வயதில் 31 வயதான ஸ்பானிஷ் நடிகையும் மொடலுமான ஹிபா அபோக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது அசரப்பிற்கு 24 வயதாகின்றது. இந்நிலையில் அசரப் மீது அவரது மனைவி ஹிபா அபோக் விவாகரத்து கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.
மேலும், தனது கணவர் அசரப் ஹக்கிமியின் கோடிக்கணக்கான சொத்துகளில் பாதியை ஜீவனாம்சமாகவும் கேட்டுள்ளார்.
அசரப் ஹக்கிமியும் தனது மனைவியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். வேண்டுமானால் தன் சொத்து முழுவதையும் அவருக்கே கொடுப்பதாக கூறினார். ஆனால் அசரப் ஹக்கிமியின் பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டபோது நீதிமன்றம் அதிர்ச்சியடைந்தது.
பரீஸ் செயின்ட் ஜெர்மைன் மற்றும் ரியல் மாட்ரிட் போன்ற அணிகளுக்காக விளையாடிய அசரப் ஹக்கிமி, தனது தொழில் சாதனைகள், பிராண்ட் அம்பாசிடர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் பரிசுத் தொகை முழுவதையும் தனது தாயாருக்கு வழங்கியுள்ளார். மேலும் தான் வாங்கிய கட்டிடங்கள், வீடுகள், மனைகள் அனைத்தையும் தனது தாயார் பெயரில் பதிவு செய்து வைத்து உள்ளார்.
இவை தவிர போட்டி கட்டணம் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் 80 சதவீதத்தை தனது தாய் பாத்திமாவின் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார்.
இதனால் அசரப் ஹக்கீமிடம் ஒரு சென்ட் நிலம், கார், சொந்த உடைகள் கூட இல்லை என்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
அசரப் தனது தாயார் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு 200 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago