2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விமான சாகச நிகழ்ச்சியில் விமானி பலி

Mayu   / 2024 ஜூன் 03 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்ச்சுகல் நாட்டின் தெற்கு பகுதியில் பெஜா விமான நிலையத்தில் பெஜா விமான காட்சி என்ற பெயரில் விமான சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (02) நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில், 6 சிறிய ரக விமானங்கள் யாக் ஸ்டார்ஸ் என்ற பெயரில் வரிசையாக வானில் பறந்து சென்றன.

அப்போது, எவரும் எதிர்பாராத வகையில், விமானமொன்று மற்றொரு விமானத்தின் மீது மோதி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததுள்ளது. 

விபத்துக்குள்ளான விமானங்கள் இரண்டும், சோவியத் நாட்டில் வடிவமைக்கப்பட்ட “ யகொவ்லெவ் யாக்-52 ரக விமானங்கள்“  ஆகும். இதனை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அந்த நிகழ்ச்சியை இரத்து செய்தனர். அவசரகால சேவை துறையினரும் மீட்பு பணிக்காக உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர் என விமான படை தெரிவித்தது.

இந்த விமான விபத்தில், விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு. தெற்கு ஐரோப்பாவில், மிக பெரிய விமான சாகச நிகழ்ச்சியாக இதனை நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .