2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

விபத்தில் 6 இராணுவ வீரர்கள் பலி

Freelancer   / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில், இன்று (10) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்தில்,வழக்கமான பயிற்சிகள் நடைபெற்றன. 

அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது.

அதேசமயம் மற்றொரு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது. 

எனினும் இந்த விபத்தில் இராணுவ ஜெனரல் உட்பட 6 வீரர்கள்  உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து, அந்நாட்டு விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X