Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Simrith / 2024 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக நாட்டின் எல்லைகளை முற்றிலுமாக மூடி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுற்றுலாவிற்காக வட கொரியா மீண்டும் தனது எல்லைகளைத் திறக்கவுள்ளதாக, வட கொரியாவுடன் தொடர்புகளைப் பேணும் இரண்டு சுற்றுலா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மறைந்த வட கொரியத் தலைவர் கிம் ஜாங் இல் பிறந்ததாகக் கூறப்படும் மலை நகரமான சாம்ஜியோனுக்கு சுற்றுலா குழுக்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட கொரியோ டூர்ஸ் மற்றும் ஷென்யாங்கை தளமாகக் கொண்ட கேடிஜி டூர்ஸ் இரண்டும் புதன்கிழமை தனித்தனியான ஒன்லைன் அறிவிப்புகளை வெளியிட்டன.
"சம்ஜியோனுக்கான சுற்றுலா மற்றும் நாட்டின் பிற பகுதிகள் 2024 டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக மீண்டும் ஆரம்பமாகுமென எமக்கு அந்நாடு உறுதிப்படுத்தியுள்ளது. பயணத் திட்டம் மற்றும் கூடுதல் விபரங்கள் எதிர்வரும் நாட்களில் உறுதி செய்யப்படும்” என கொரியோ டூர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago