2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ரஷ்யாவில் பயணிகள் இரயில் தடம்புரண்டு 70 பேர் காயம்

Freelancer   / 2024 ஜூன் 27 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யாவில் பயணிகள் இரயில் தடம்புரண்டதில் 70 பேர் காயமுற்றனர். இந்நிலையில், உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இது குறித்து அந்த மாகாண கவர்னர் விளாடிமிர் உய்பா கூறுகையில்;, “ரஷ்யாவின் வடமேற்கு ஹோமி குடியரசு பகுதியில் சென்ற இரயில் வளைவுபகுதியில் திரும்பிய போது தடம் புரண்டு கவிழ்ந்தது. மொத்தம் இந்த இரயிலில் 215 பேர் பயணித்துள்ளனர். 9 பெட்டிகள் கவிழ்ந்ததில் 70 பேர் காயமுற்றனர். 20 பேர் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .