2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

மொழிபெயர்ப்புச் சேவையை நிறுத்தியது ‘கூகுள்‘

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கூகுள்  நிறுவனமானது, சீனாவில் தமது சேவைகள் பலவற்றை நிறுத்தி வந்த நிலையில், தற்போது  மொழி பெயர்ப்புச் சேவையையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

குறைவான பயன்பாடு, மற்றும் சீன மொழியை மொழிபெயர்ப்பதில் கூகுளை விடவும் உள்நாட்டுச்  செயலிகள்  சிறந்து விளங்குவதுமே இதற்கான காரணமாகக்  கூறப்படுகின்றது.

குறிப்பாக சீனாவில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூகுள் அளிக்கும் சேவைகளை விட மிகச் சிறப்பான சேவைகளை சீன மக்களுக்கு வழங்கி வருவதால், கூகுளினால் சீனாவில் சிறந்து விளங்க முடியாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் தொகை அதிகம் கொண்ட  சீனாவில் மொழிபெயர்ப்பு சேவையை  நிறுத்தியிருப்பது கூகுள் நிறுவனத்திற்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .