Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஒக்டோபர் 22 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுமான நிறுவனத்துடன் ஊழலில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் உள்ள கட்டுமான நிறுவனத்துடன் ஊழலில் ஈடுபட்டதாக 20 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் கட்டுமான நிறுவனத்தில் பல இலட்சம் டாலர்கள் இலஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்ததற்கு ஓடேபெக்ட் என்னும் கட்டுமான நிறுவனத்தில் இருந்து 35 மில்லியன் டாலர் இலஞ்சம் பெற்றதாக டோலிடோ மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்.
அலெஜான்ட்ரோ டோலிடோ 2001 முதல் 2006 வரை பெருவின் அதிபராக பதவி வகித்துள்ளார்.
இந்த வழக்கை அமெரிக்கா விசாரணை நடத்தியது. அதன்படி, மெக்சிகோ, குவாதமாலா, ஈகுவடார் ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா தனது விசாரணையைத் தொடங்கியது. மேலும், இந்த விசாரணையில் டோலிடோ உள்பட பெருவின் முன்னாள் ஜனாதிபதி கள் 4 பேர் மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனாலும், இந்த ஊழல் வழக்கை அலெஜான்ட்ரோ டோலிடோ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
35 minute ago
43 minute ago
45 minute ago