2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மீண்டும் ஒரு புதிய கொரோனா வைரஸ்

Freelancer   / 2024 ஜூன் 25 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவில், மீண்டும் ஒரு புதிய கொரோனாவைரஸ் மாறுபாடு வேகமாகப் பரவ ஆரம்பமாகியுள்ளது. இந்த வைரஸானது பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

 

ஏப்ரல் மாதம், FLiRT என அழைக்கப்படும் கொரோனா வைரஸ்களின் மாறுபாடுகளில் ஒன்றான KP. 3 என்னும் கொரோனாவைரஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த புதிய கொரோனா வைரஸ் பெண்களைவிட ஆண்களை எளிதாக தொற்றிக்கொள்வது தெரியவந்துள்ளது. கொரோனாவைரஸின் அறிகுறிகள் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், தற்போதைய அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அதிக உடல் சூட்டுடனான குளிர் காய்ச்சல், புதிதாக உருவாகியுள்ள அறிகுறியான தொடர் இருமல், சுவை, வாசனை அறிவதில் மாற்றம் அல்லது இழப்பு, மூச்சுத்திணறல், சோர்வாக உணர்தல், உடல் வலி, தலைவலி, தொண்டை அழற்சி, மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிதல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, எப்போதும் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்ற உணர்வு ஆகியவை இதன் அறிகுறிகள் என பிரித்தானிய மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .