2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மழை வேண்டி பிரார்த்தனை

Freelancer   / 2024 டிசெம்பர் 08 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை வேண்டி அந்நாட்டின் ஜனாதிபதி, ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை பெய்ய வேண்டி பொதுமக்கள் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என, அந்நாட்டின்  ஜனாதிபதி ஷேக் முகமது பின் சையது வலியுறுத்தினார். 

அமீரகத்திற்கு மழையும், இரக்கமும் அளித்து ஆசீர்வதிக்க வேண்டும் என வேண்டி கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

இதையடுத்து, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சலாத் அல் இஸ்திஸ்கா என்ற சடங்கு மற்றும் தண்ணீரின் முக்கியத்துவம் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இமாம்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் கைகளை உயர்த்தி இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதில், அஜ்மன் ஆட்சியாளர் ஷேக் உமைத் பின் ரஷீத் அல் நுவாமி, ராஸ் அல் கைமா ஆட்சியாளர் ஷேக் சவுத் பின் சாகிர் அல் குவாசிமி ஆகியோர் வழிபாட்டாளர்களுடன் இணைந்து நாடு முழுவதும் இஸ்திஸ்கா வழிபாட்டில், சனிக்கிழமை (7) ஈடுபட்டனர்.

இதில் தெய்வீக கருணை, அபரிமித மழைப்பொழிவு, வளம் செறிந்த பயிர்கள், அதிபர் மற்றும் அவரை பின்பற்றி நடக்கும் ஆட்சியாளர்கள் ஆகியோரை பாதுகாப்பது மற்றும் தேசத்தின் தலைவர்களுக்கு தெய்வீக வழிகாட்டுதல் ஆகியவற்றிற்காக அவர்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X