2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மயோட்டே தீவில் புயல்:11 பேர் பலி; 200 பேர் படுகாயம்

Freelancer   / 2024 டிசெம்பர் 16 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள  மயோட்டே தீவை, ஞாயிற்றுக்கிழமை (15),  “சிண்டோ” என்ற புயல் தாக்கியது.

 கனமழையுடன் வீசிய இந்தப் புயலால், பல வீடுகள் சேதமடைந்தன.

மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

இந்தப் புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.

புயல் தாக்கிய மயோட்டே தீவுக்கு தேவையான நிவாரண உதவிகளை, பிரான்ஸ் அரசு துரிதப்படுத்தியுள்ளது. மீட்புப்பணியில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .