Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2022 ஜனவரி 25 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைக்காலமாக மனித மூளைகளோடு தொழில்நுட்பத்தை இணைக்க உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க்கை (Elon musk) மனித மூளையை சிப் (Chip) மூலம் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது குறித்த பரிசோதனையை எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தொழில்நுட்பத்தின் மூலம் மனித மூளையில் ஒரு சிறிய சிப் பொருத்தப்படுவதோடு அச் சிப்பின் செயல்பாடுகளை கணினி மற்றும் தொலைபேசி போன்ற சாதனங்களுடன் இணைக்கப்படவுள்ளதாகவும்
இதன் மூலம் குறித்த சாதனங்களை தொடாமலேயே நினைவுகள் வாயிலாக இயக்க முடியும் எனவும், மனித மூளை என்ன நினைக்கிறது என்பதையும் அச் சாதனங்களில் பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சிப்பின் மூலம் மனித மூளையில் ஏற்படும் முடக்குவாதம், நரம்பியல் பிரச்சினைகள், பாதிப்புகள் குறித்து சரி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago