Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 28 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலதிபர் ஒருவர் , தன்னை இளமையாக வைத்திருக்க பிளாஸ்மா ஸ்வாப்பிங் முறையில் தனது மகனின் இரத்த பிளாஸ்மாவை தனக்குள் செலுத்திக் கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
45 வயதான பிரையன் ஜோன்சன், என்ற குறித்த நபர் தனது 70 வயதான தந்தை ரிச்சர்ட் மற்றும் 17 வயது மகனான டால்மேஜ் ஆகியோருடன் டெக்சாஸில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு டால்மேஜ் உடலில் இருந்து ஒரு லீற்றர் இரத்தம் எடுக்கப்பட்டு அதில் இருந்து பிளாஸ்மா பிரித்து எடுக்கப்பட்டு, தந்தையான பிரைன் ஜோன்சனுக்கு செலுத்தப்பட்டது. இதேபோல், பிரைன் ஜோன்சன் உடலிலிருந்தும் பிளாஸ்மா பிரித்து எடுக்கப்பட்டு ரிச்சர்ட் உடலில் செலுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் பல மில்லியன் டொலர்களை செலவழித்து இதனை செய்து வருவதாக கூறும் பிரையன், இதற்காக உணவு, உடற்பயிற்சி, உறக்கத்தில் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
1 hours ago