Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2023 மார்ச் 16 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் சர்வதேச அமைப்பான la francophonie இன் அனுசரணையுடன், சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பாடல்கள் ஒன்றிணைந்த இசை நிகழ்வு, இலங்கையின் மூன்று பிரதான நகரங்களில் நடாத்தப்படவுள்ளது. francophonie 2023 இனைக் கொண்டாடும் வகையில் புகழ்பெற்ற "Les Monsieur Monsieur " குழுவின் Laurent BRUNETTI மற்றும் Mario PACCHIOLI இருவரும் இணைந்து இந் நிகழ்வை நடாத்தவுள்ளனர்.
அறிமுக நிகழ்வு இலங்கை மன்றக் கல்வியகத்தின் (SLF) ' Garden Nuga ' பகுதியில் மார்ச் மாதம் 24 ஆம் திகதி பி.ப. 7.00 மணி முதல் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் மார்ச் 26 ஆம் திகதி பி.ப. 7.00 மணி முதல் இடம்பெறும். இறுதி நிகழ்வு கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மார்ச் 28 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும். இந் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.
இவ் இசைப் பயணத்தில் மேற்குறிப்பிட்ட பாடகர்களின் சொந்த இசையமைப்பில் உருவான பாடல்கள் மற்றும் பிரான்ஸ், சுவிஸ் நாட்டு இசையமைப்பாளர்களின் சிறந்த இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் இசைக்கப்படவுள்ளது.
இந்த இசை நிகழ்வுக்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று கொழும்பு ப்ரெஞ்சு மொழி கல்வி நிலையத்தில் நேற்று (15) நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
54 minute ago
58 minute ago
1 hours ago