2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

போர் நிறுத்தம் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்

Mayu   / 2024 மே 13 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த வருடம் ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பணய கைதிகளாக 240 பேரை கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 7 மாதங்களை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எனவே போரை நிறுத்த கோரி ஐ.நா. மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

அதேபோல் வெளிநாடுகளிலுள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அதனை நிராகரித்தார்.

இந்நிலையில், காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் உடனடியாக தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக குவைத்தில் நடந்த சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், "காசாவில் உடனடியாக மனிதாபிமான போர்நிறுத்தம் காலத்தின் தேவை. அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.

மனிதாபிமான உதவிகளில் உடனடி எழுச்சிக்கான எனது அழைப்பு மற்றும் உலகின் அழைப்பை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

போர் நிறுத்தம் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். இந்தப் போரின் பேரழிவுகள் மற்றும் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலங்கள் தேவைப்படும்" என்று ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .