Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 ஜூன் 12 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஸாவில் போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய போர் நிறுத்த திட்டத்துக்கு ஆதரவாக கவுன்சில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது இதுவே முதல்முறையாகும்.
இந்த ஒப்பந்த திட்டத்தை இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஏற்பது குறித்து சந்தேகம் நீடித்துவரும் நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள இந்தத் தீா்மானம் அதை ஏற்பதற்கான அழுத்தத்தை இரு தரப்பினருக்கும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடா்பாக கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்தை ஆதரித்து 15 உறுப்பு நாடுகள் வாக்களித்தன; ரஷியா வாக்களிப்பைப் புறக்கணித்தது; தீா்மானத்தை எதிர்த்து ஒரு நாடு கூட வாக்களிக்கவில்லை. அதையடுத்து அந்தத் தீா்மானம் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்களிப்பைத் தொடா்ந்து, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், ‘காஸாவில் போரை நிறுத்தவும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்குமான ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு ஹமாஸ் அமைப்பை வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகக் கூறும் ஹமாஸ், அதை நிரூபிப்பதற்கான நேரம் இது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீா்மானத்தை வரவேற்பதாக ஹமாஸ் அமைப்பினரும் தெரிவித்துள்ளனா். இருந்தாலும், ஒப்பந்த திட்ட அம்சங்களை தங்கள் தலைமை ஏற்றுக்கொண்டுவிட்டதா என்பதை அவர்கள் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago