Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 13 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈராக்கில், பெண்ணின் திருமண வயதை 18இல் இருந்து 9ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய, அந்நாட்டு பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஷியா பழைமைவாத குழுவினர், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வகிப்பதால், இந்த சட்ட திருத்தத்தைஞ நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என கூறப்படுகிறது.
ஆனாலும், பெண்கள், மனித உரிமை குழுவினர், இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும். அத்துடன், அவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும், பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என கவலை, அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஈராக்கில் உள்ள பெண்கள் குழுவினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து, பெண்ணின் திருமண வயதில் திருத்தங்கள் செய்துள்ள இந்த மசோதாவை சட்டமாக இயற்றும் முயற்சிகளில், ஈராக் அரசு ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago