Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில், பெண்கள் வானொலிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை தலீபான்கள் அகற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில், 2021ஆம் ஆண்டு, தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்கள், சிறுமிகள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து ரேடியோ பேகம் என்ற பெண்கள் வானொலி நிலையத்துக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க ஆப்கானிய பெண்களால் இயங்கும் ஒரு வானொலி ஆகும். இதன்மூலம் அந்த நாட்டின் பாடசாலைக் கல்வி பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
அந்த வானொலியை மீண்டும் இயக்க அனுமதிக்க கோரி தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, பெண்கள் வானொலிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை தலீபான்கள் அகற்றி உள்ளனர்.
இது தொடர்பாக தலீபான் அரசின் செய்தி மற்றும் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ரேடியோ பேகம்' வானொலி மீண்டும் இயக்கப்பட வேண்டும் என தொடர்ந்து அவர்கள் கேட்டுகொண்டதனால், அதன் மீதான தடை விலக்கப்பட்டு இயக்கப்பட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மேலும், இஸ்லாமிய ஆப்கானிஸ்தான் அமீரகத்தின் ஊடகத்துறை கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவதாகவும், எதிர்காலத்தில் எந்தவொரு விதிமீறல்களிலும் ஈடுபட மாட்டோம் என அந்நிறுவனம் உறுதியளித்ததை தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
42 minute ago
2 hours ago