Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூலை 16 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்தில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, கே.பி.சர்மா ஒலி 4ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் 2 துணை பிரதமர்கள், 19 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.
நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தாவின் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நேபாளி காங்கிரஸ் கட்சி, ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியுடன் புதிய கூட்டணி அமைத்தது.
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த பிரசந்தா பதவி இழந்தார். இதைத் தொடர்ந்து, புதிய கூட்டணியுடன் நேபாளி காங்கிரசின் கே.பி.சர்மா ஒலி ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.
அதற்கு குடியரசு தலைவர் ராம் சந்திரா பவுடேல் அனுமதி அளித்த நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இதில் புதிய பிரதமராக பதவியேற்ற ஒலிக்கு குடியரசு தலைவர் பவுடேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சர்மா ஒலியுடன், 2 துணைப் பிரதமர்களாக பிரகாஷ் மான் சிங், பிஷ்ணு பவுடெல் ஆகியோரும் 19 அமைச்சர்களும் பதவியேற்றனர். வரும் 2027இல் அடுத்த பொதுத்தேர்தல் நடக்கும் வரை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சுழற்சி முறையில் ஆட்சி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
தற்போது நேபாள நாடாளுமன்றத்தில் நேபாள காங்கிரசுக்கு 88 உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 77 எம்பிக்கள் என 165 உறுப்பினர்கள் பலம் உள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு பிரதமர் ஒலி நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இதற்கு 275 எம்பிக்கள் ஆதரவு தேவை என்பதால் ஒலி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே ஒலி அக்டோபர் 2015 முதல் ஆகஸ்ட் 2016 வரையிலும், பெப்ரவரி 5, 2018 முதல் ஜூலை 13, 2021 வரையிலும், மே 2021 முதல் ஜூலை 2021 வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். தற்போது 4வது முறையாக அவர் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், நேபாளத்தில் கடந்த 16 ஆண்டுகளில் 14 முறை ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago