2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பிரேசில் விமான விபத்தில் 61 பேர் பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலின் சாவோ பாவ்லோ மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 61 பேரும் உயிரிழந்துள்ளனர்.
 
ஏ.டி.ஆர் 72-500 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேசிலின் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாவ்லோ நோக்கிப் பயணித்த விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விமானத்தில் 57 பயணிகளும் நான்கு பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .