2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பிரான்ஸில் இமானுவலின் ஆட்சி கவிழ்ந்தது

Freelancer   / 2024 டிசெம்பர் 05 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் நெருக்கடியால் பிரான்ஸில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. 

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அடுத்தே, ஆட்சி கவிழ்ந்துள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள கடும் நிதி பற்றாக்குறை காரணமாக, அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 

இதனால் பிரான்ஸில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது.

மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .