2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பார்த்தவர் பதவி நீக்கம்

Mayu   / 2024 மே 13 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை நடவ​டிக்கை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரியொருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் பெண்ணொருவர் 45 கி.மீ. வேகத்தில் காரொன்றை செலுத்தி வந்துள்ளார். இவரிடம் வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்களை காண்பியுங்கள் என பொலிஸ் அதிகாரியொருவர் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண், சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறி விட்டு, தனது மார்பகங்களை காண்பித்துள்ளார்.

அந்த அதிகாரியும் மார்பகங்களை பார்த்தவாறு, எச்சரிக்கையுடன் உங்களை செல்ல அனுமதிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி சமூக வளைத்தளங்களில் பரவியதையடுத்து குறித்த அதிகாரி உடனடியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .