2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பாம்பால் சுமார் 16,000 பேர் மின்சாரம் இன்றித் தவிப்பு

Ilango Bharathy   / 2023 மே 21 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாம்பால் சுமார் 16,000 பேர் மின்சாரம் இன்றித் தவித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

 அண்மையில்  அமெரிக்காவின் , ஆஸ்டின் மாகாண மின் நிலையத்திற்குள் பாம்பொன்று புகுந்து மின்சார சர்க்யூட்களில் ஊர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இதன்காரணமாக சுமார் 16,000 பேருக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. எனினும் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், மின்சார சேவை வழமைக்கு திரும்பியது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த  அம்மாகாண எரிசக்தி துறை அதிகாரி மாட் மிட்செல், ” இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க, மின் நிலையங்கள் முன்பு குறைந்த வோல்டேஜ் கொண்ட பாம்பு பிடி கூண்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத்” தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .