Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mayu / 2024 மார்ச் 11 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் கடந்த மாதம் 8திகதி பாராளுமன்ற தேர்தல் கடும் பரபரப்புக்கு மத்தியில் நடந்து முடிந்தது.
இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவியது.
இதனையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வியின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் ஜனாதிபதி தேர்தலும் நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர் தாரி 411 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அச்சக்சாய் 181 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதன்மூலம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அவரது பதவியேற்பு விழா தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது நாட்டின் 14-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிப் அலி சர்தாரிக்கு பாகிஸ்தான் தலைமை நீதிபதி காசி பேஸ் இசா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago