2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பஸ் விபத்தில் ஐவர் பலி; 15 பேர் காயம்

Freelancer   / 2024 நவம்பர் 03 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் - ஜகோபாபாத் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில், 5 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (2), பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பஞ்சாப் மாகாணம் நோக்கி பயணித்த குறித்த பஸ், திடீரென வேக கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடந்த மே மாதம், ஜகோபாபாத் பகுதியில், திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த விருந்தினர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஒன்று, விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்தனர். அந்த பஸ்சின் டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .