2025 மார்ச் 15, சனிக்கிழமை

பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில் நேற்று முன்தினம் (10) பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

 இந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

விபத்துக்குள்ளான பஸ் பாலத்தில் இருந்து கவிழ்ந்து கழிவுநீரால் மாசுபட்ட ஆற்றில் விழுந்ததாகவும், 70-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பஸ் இடிபாடுகளில் இருந்து 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் மீட்புக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. 

 விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .