2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பறவைக் காய்ச்சலால் 42 இலட்சம் கோழிகள் அழிப்பு

Freelancer   / 2024 மே 30 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அயோவா நாட்டில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதால், குறிப்பிட்ட கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட 42 இலட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.

அமெரிக்காவின் மத்திய கிழக்கில் அமைந்துள்ள அயோவா நாட்டின் சியோக்ஸ் கவுண்டியில் அமைந்துள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நோயானது அப்பகுதியில் இருக்கும் கறவை மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.

இதையறிந்த கால்நடைத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 42 இலட்சம் கோழிகளை அழித்தனர்.

மேலும், கடந்த வாரம், மினசோட்டா பகுதியில் அமைந்துள்ள முட்டை கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சல் வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், அங்கு 14 இலட்சம் கோழிகளை அழித்தனர்.

இந்நிலையில் நோய் தொற்று மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவாமல் இருப்பதற்காக, நோய் தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .