2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

பேஜர்கள் வெடித்து ஒன்பது பேர் பலி 2,700 பேர் காயம்

Freelancer   / 2024 செப்டெம்பர் 18 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனானில் கையடக்க கருவியான பேஜர்கள் வெடித்ததில் லெபனான் எம்.பி மகன் உட்பட ஒன்பது பேர் பலியாயினர். 2,700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த அசம்பாவிதத்துக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தெற்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலர் வைத்திருந்த கையடக்க பேஜர்கள் வெடித்தன. இதை தொடர்ந்து பேஜர்களை பயன்படுத்தும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் வைத்திருந்த பேஜர்களும் தொடர்ச்சியாக வெடித்தன.

இதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் மருத்துவர்கள் என 2,700 பேர் காயமடைந்ததாகவும் ஒன்பது பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் முதல் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் போர் நடத்திவரும் நிலையில், இந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் என ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளது.

பேஜர்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக வெளியே வீசி எறிய வேண்டும். எனவும் அதனை பயன்படுத்த வேண்டாம் என வும் அறிவித்து நாடு முழுவதும் அவசர நிலையை லெபனான் நாடு அறிவித்துள்ளது.

இந்த வெடிவிபத்தில் ஈரான் தூதர் முஜூதாபாஅமானி என்பவர் காயமடைந்ததாகவும் லெபனான் எம்.பி.,மகன் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .