2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பங்களாதேஷ் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு

Freelancer   / 2024 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது.

இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நிலைமை மோசமானதையடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். மேலும், இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுக்களின் பிரிதிநிதிகள் கொண்ட 13 பேருடன் நேற்று அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸை இடைக்கால தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீனால் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் முகமது யூனுஸ் தலைமையில் இன்று இடைக்கால அரசு இன்று பதவியேற்கிறது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .