2025 மார்ச் 12, புதன்கிழமை

பாகிஸ்தானில் ரயில் கடத்தல்

Freelancer   / 2025 மார்ச் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயிலை மறித்த தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சுமார் 182 பேரை பணயக் கைதிகளாக வைத்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 20 பேரை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் செவ்வாய்கிழமை கடத்தினர். இதற்கு பலூச் விடுதலை இராணுவம் (Baloch Liberation Army-BLA) எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 20 பேரை கொன்றுள்ளதாக அந்த தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் வசம் சுமார் 182 பேர் பணயக் கைதிகளாக உள்ளனர் என அந்த அமைப்பு கூறியுள்ளது. பாதுகாப்பு படை அதிகாரிகள் தங்களை நெருங்கினால் பணய க்கைதிகள் அனைவரையும் கொல்வதாக மிரட்டல் விடுத்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .