Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஜனவரி 10 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈக்வடார் நாட்டில் தொலைக்காட்சி ஒன்றின் நேரலையின் போது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கும்பலின் தலைவன் 2 தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து தப்பியதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு ஜனாதிபதி டேனியல் நோபாவா அவசர நிலையை பிரகடனம் செய்ததை அடுத்து பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
அதில் ஒரு பகுதியாக ஈக்வடார் நாட்டில் பிரபலமான தொலைக்காட்சி அரங்கில் நேரலையின் போது, துப்பாக்கியுடன் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அந்த நிறுவனத்தையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
துப்பாக்கியுடன் நுழைந்தவர்கள் அங்கிருந்தவர்களை தாக்கிய காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானதால் நாடு முழுவதும் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தொலைக்காட்சி அலுவலக ஊழியர்களை பத்திரமாக மீட்டதோடு 13 பேரை சிறைபிடித்துள்ளனர்.
தொலைக்காட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.
போதைப் பொருள் விற்பனை கும்பலின் தலைவன் சிறையில் இருந்து தப்பிய பின்னர் இதுவரை 7 காவல்துறை உயர் அதிகாரிகள் கடத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பல்வேறு இடங்களில் பொலிஸாரின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு வெடிகுண்டு தாக்குதல்கள் தொடர்வதால் நாடு முழுவதும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
https://www.reuters.com/world/americas/explosions-kidnapping-police-mark-ecuador-state-emergency-2024-01-09/
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago