Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளி மற்றும் பூமியை போல உள்ள மற்ற கிரகங்கள் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் Black hole தொடர்பாக நாசா அண்மையில் வெளியிட்டுள்ள ஒலிப் பதிவொன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கருந்துளை எனப்படும் Black Hole என்பது பல ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட நிலையில், இது தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில பெரு நட்சத்திரங்களின் வெடிப்பு நிகழும் போது, அதன் அழிவில் இருந்து தான் பொதுவாக கருந்துளைகள் உருவாவதாக கூறப்படுகிறது. அப்படி உருவாகும் இந்த கருந்துளைகளில், சிலவை சூரியனை போல பல மடங்கு பெரிதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட கருந்துளையின் ஒலி எப்படி இருக்கும் என்பது குறித்த ஒலிபதிவுடன் கூடிய வீடியோ ஒன்றை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
விண்வெளியின் வெற்றிடத்தில் பொதுவாக ஒலி பயணிக்காது என நம்பப்படும் நிலையில், தற்போது நாசா வெளியிட்ட கருந்துளையின் சத்தம் என்பது சற்று அமானுஷ்யமான வகையில், பேய்கள் அல்லது வேற்றுகிரகவாசிகள் முனகல் போல இருப்பதாக மக்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
கருந்துளைக்கு மிக அருகில் கைப்பற்றப்பட்டுள்ள இந்த ஒலியானது, சற்று அச்சுறுத்தக் கூடிய வகையில் உள்ள நிலையில், மனித செவிப்புலன் வரம்புக்குள் வராத அளவு குறைவாக இருந்ததாகவும், அதனை பெருமளவில் மாற்றங்கள் செய்து, அனைவரும் கேட்கும் வகையில் வெளியிட்டதாகவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கருந்துளையின் இருந்து ஒலி அலைகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago