2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நாசாவுக்கு புதிய தலைவர் நியமனம்

Freelancer   / 2024 டிசெம்பர் 05 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (நாசா அமைப்பு) அடுத்த தலைவராக, ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட. டிரம்ப் நியமித்துள்ளார். 

“ஷிப்ட்4” என்ற இணைய பணபரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜாரெட் ஈசாக்மேன், கோடீசுவரராவார்.

இது குறித்து டிரம்ப் கூறும்போது, “ஒரு நிறைவான வர்த்தக தலைவர், ஏழை பங்காளர், விமானி மற்றும் விண்வெளி வீரரான ஜாரெட் ஈசாக்மேனை நாசாவின் நிர்வாகியாக நியமிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

“நாசா அமைப்பின் கண்டுபிடிப்பு மற்றும் உந்துதல், விண்வெளி அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றில் அளப்பரிய சாதனைகளுக்கான வழிகளை ஏற்படுத்துவது மற்றும் கற்று கொள்வது ஆகியவற்றை ஜாரெட் வழி நடத்தி செல்வார்”என கூறியுள்ளார். 




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X