Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடுவானில் விமானியை சிலந்தி கடித்ததால் ஜெர்மனி-ஸ்பெயின் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெர்மனியின் டசல்டார்ப் நகரத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகருக்கு ஐபீரியா ஏர்பஸ் ஏ320 விமானம் சென்றுகொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானியை சிலந்தி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் விமானிக்கு கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமான பணிப்பெண்கள், விமானிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.இதற்கிடையில், விமானம் திட்டமிட்டபடி மேட்ரிட் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட பின்னர், விமானம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட விமானியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்றப்பட்ட லக்கேஜ் வழியாக சிலந்தி பூச்சி விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக ஐபீரியா ஏர்பஸ் ஏ320 விமானம் மேட்ரிட் விமான நிலையத்தில் சுமார் 3 மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
34 minute ago
2 hours ago