2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நடுவானில் குலுங்கிய கட்டார் ஏர்வேஸ் விமானம்; 12 பேர் காயம்

Editorial   / 2024 மே 27 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டார்  ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் கியூ.ஆர்.017 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று,   கட்டார்  நாட்டின் தோஹா நகரில் இருந்து  மதியம் 1 மணியளவில் டப்ளின் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானம் துருக்கி நாட்டுக்கு மேலே சென்றபோது, நடுவானில் திடீரென குலுங்கியுள்ளது.

 இதில், விமானத்தில் பயணித்த 6 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து, டப்ளின் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், டப்ளின் விமான நிலையத்தின் பொலிஸார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவிக்கு ஓடி சென்றனர்.

இதனை டப்ளின் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கை ஒன்று உறுதிப்படுத்தி உள்ளது. 5 நாட்களுக்கு முன் லண்டன் நகரில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இதுபோன்று நடுவானில் திடீரென்று குலுங்கியது.

211 பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தில் இருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 73 வயது முதியவர் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணம் அடைந்து விட்டார். 20 பேர் காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்களும் வெளிவந்து வைரலாகின.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .