2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

தொட்டோம்; கெட்டோம்

Freelancer   / 2023 ஜூன் 27 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு புதிய  அம்சங்களை  வழங்குவதாக  வரும்  தகவலை  நம்பி  பிங்க்  வாட்ஸ்  அப்பை  தொட்டீர்கள்  என்றால்  உங்கள்  ஸ்மார்ட் போன்  உங்கள்  கட்டுப்பாட்டில்  இருக்காது  என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள். அது போலத்தான் எது ஒன்று பிரபலமாக இருக்கிறதோ அதைதான் மோசடிக்காரர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இப்போது குறிவைக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அண்மையில் ஒரு மெசேஜ் அனுப்பப்படுகிறது. அந்த மெசேஜில் வரும் லிங்கை கிளிக் செய்தால் வாட்ஸ் அப் லோகோ பிங்க் நிறத்திற்கு மாறும் என்றும், அதை தொடர்ந்து வாட்ஸ் அப் பல்வேறு அப்டேட்களைப் பெறும் எனவும் அந்த மெசேஜில் கூறப்பட்டிருக்கும். இதை நம்பி அந்த லிங்கை தொட்டோம்: கெட்டோம்.

  அந்த லிங்கை கிளிக் செய்தால்  வரக்கூடிய விபரீதங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தெரியாமல் கூட பிங்க் வாட்ஸ்அப்பை டவுன்லோட் செய்ய வேண்டாம். அவ்வளவு ஏன், டவுன்லோட் செய்வதற்கான லிங்க்-ஐ கூட கிளிக் செய்ய வேண்டாமென்று வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X