2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தென்கொரியா ஜனாதிபதி விரைவில் கைதாவார்?

Freelancer   / 2024 டிசெம்பர் 12 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோலை கைது செய்ய முக்கிய ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதால், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என,  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

தென்கொரியாவில் கடந்த 3ஆம் திகதி, ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென இராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை மீளப்பெற்றுக்கொண்டார். 

இதற்கிடையே, அவசர நிலையை அறிவிக்க தூண்டுதலாக இருந்ததாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி, இராணுவ அமைச்சர் கிம் யாங் ஹியூன் கைதுசெய்யப்பட்டார்.

தலைநகர் சியோலில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன. 

இந்நிலையில், கழிவறைக்கு சென்ற அவர், தனது ஆடையை கிழித்து தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்கொள்ளும்.

இதையடுத்து, அவரை அங்கிருந்த பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து, தென்கொரியா ஜனாதிபதி அலுவலகத்தில், பொலிஸார் சென்று சோதனை நடத்தியுள்ளனர். 

இந்த நிலையில், அந்த நாட்டில் தலைமறைவாக உள்ள தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோலை கைது செய்ய முக்கிய ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதால், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X