2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தென்கொரியாவில் இடைக்கால ஆட்சி ஆரம்பம்

Freelancer   / 2024 டிசெம்பர் 16 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவின் இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ஹான் டக்-சூவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கொரியாவில், எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து பாராளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாக, ஜனாதிபதி யூன் சுக்-இயோல் குற்றம்சாட்டி வந்தார். 

இதனையடுத்து, கடந்த 3ஆம் திகதியன்று, அங்கு இராணுவ அவசர நிலையை அறிவித்தார். அவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால் அவசர நிலை கைவிடப்பட்டது. 

எனினும், ஜனாதிபதி பதவி விலக கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக, போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு 2ஆவது முறையாக ஜனாதிபதிக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் மொத்தமுள்ள 300 எம்.பி.க்களில் 204 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

இதனையடுத்து ஜனாதிபதி யூன் சுக்-இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

மேலும், இடைக்கால ஜனாதிபதியாக, பிரதமர் ஹான் டக்-சூவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

 ஜனாதிபதி யூன் சுக்-இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தலைநகர் சியோலில் உற்சாக குரல் எழுப்பி பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் அமைதி காக்கும்படி அங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X