Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 30 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மேலும், ஐந்து பணயக் கைதிகளை விடுவிப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்து இருக்கிறது.
இந்த முறை சரியாக 50 நாட்கள் போர் நிறுத்தம் அமுலில் இருக்கும்.
ரமலான் முடிவை குறிக்கும் ஈத், சனிக்கிழமை (29) இரவு தொடங்கி புதன்கிழமை (2) முடிவடைகிறது.
ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹயா, ஒரு தொலைக்காட்சி அறிக்கையின் போது, குழுவின் "நேர்மறையான" பதிலையும் அதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டதையும் உறுதிப்படுத்தினார் என சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் ஆரம்ப போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை "முழுமையாகக் கடைப்பிடித்துள்ளது" என்றும், இஸ்ரேல் "இந்த திட்டத்தைத் தடுக்காது" என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் அல்-ஹயா கூறினார்.
எகிப்து அறிவித்த போர் நிறுத்த ஒபந்தத்திற்கு இஸ்ரேல் ஒரு எதிர் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக, இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மத்தியஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட திட்டத்தைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, சனிக்கிழமை (29) தொடர் ஆலோசனைகளை நடத்தினார்.
இதன் பிறகு, இஸ்ரேல் தனது எதிர் திட்டத்தை அமெரிக்காவுடன் முழு ஒருங்கிணைப்புடன் மத்தியஸ்தர்களுக்கு வழங்கியுள்ளது," என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறியது.
இஸ்ரேல் தரப்பில் வழங்கப்பட்டுள்ள எதிர் திட்ட விவரங்கள் பற்றிய தகவல்கள் இல்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago