2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ட்ரம்ப் குற்றவாளி: குற்றவியல் வழக்கில் தீர்ப்பு

Freelancer   / 2024 ஜூன் 01 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான மோசடி நிதி அறிக்கைகள் தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நியூயோர்க் மாநிலத்திலுள்ள மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதுடன், 22 பேரின் சாட்சியங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

12 நடுவர்கள் இரண்டு வாரங்கள் விவாதித்து  ஒருமனதாக இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

வழக்கு தொடர்பான 34 குற்றச்சாட்டுகளிலும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம், அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் வழக்கொன்றில் தண்டனை பெற்ற முதல் முன்னாள் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதிவாகியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கு சுமார் 1.3 லட்சம் டொலர்களை 2016 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து கொடுத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .