Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 20 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ட்ரம்ப் உடன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானியும் நிகழ்த்திய சந்திப்பு கவனம் பெறுகிறது.
ட்ரம்புடன் அம்பானி தம்பதி எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47ஆவது ஜனாதிபதியாக வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில், இன்று (20) பதவியேற்கவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவுக்கு வெளிநாட்டு தலைவர்களை அழைப்பது வழக்கம் இல்லை. ஆனால், இந்த முறை ட்ரம்ப் வெளிநாட்டு தலைவர்கள் சிலருக்கு, அழைப்பு விடுத்துள்ளார்.
அதேபோல் தொழிலதிபர்கள் பலருக்கும் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் ட்ரம்ப் வைத்த இரவு விருந்தில் பங்கேற்றனர்,
இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்கும் ட்ரம்ப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியா - அமெரிக்கா கூட்டுறவு இருநாடுகளுக்கும், உலகுக்கும் வளர்ச்சியைத் தரும் சாத்தியங்களைக் கொண்டிருப்பதாகக் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago