2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

டுபாய்-இந்தியா கடலுக்கு அடியில் ரயில் சேவை

Freelancer   / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையே கடலுக்கு அடியில் ரயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக தேசிய ஆலோசனை குழு புதிய திட்டம் ஒன்றை பரீசிலனையில் வைத்துள்ளது. அதன்படி டுபாய் மற்றும் மும்பைக்கு இடையே கடலுக்கு அடியில் செல்லும் ரயில் பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டால் அதில் ஓடும் ரயில் மணிக்கு 600 முதல் 1000 கி.மீ. வேகம் வரை இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து 2 ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மும்பைக்கு, விமானங்களும், கப்பல்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அதில் கடலுக்கு அடியில் ரயில் போக்குவரத்தும் இணையவுள்ளது.

இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால் டுபாயில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

இந்த பாதை கடலுக்கு அடியில் அமைக்க வேண்டியது இருப்பதால் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். இதில் நிறைய சவால்களும் உள்ளன.

ரயில் வேகமாக பயணிக்கும் போது ரயில் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த பாதையில் ரயில் பயணிக்கும் போது கடலின் அடியில் உள்ள ரம்மியமான காட்சிகளை பயணிகள் பார்க்கும் வகையில் ரயில்களை கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயில்கள் பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படும்.

டுபாய் மற்றும் இந்தியா இடையே விரைவாக சரக்கு போக்குவரத்தை கையாள முடியும். இது கச்சா எண்ணை உள்ளிட்ட முக்கியமான மூலப்பொருட்களை துபாயில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய புதிய மற்றும் குறைந்த செலவிலான வழியை ஏற்படுத்தும்.

இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு தேவைப்படும். இதை திட்ட ரீதியாக தயார் செய்துவிட்டார்கள்.

இதற்கான ஒப்புதலும் நிதியும் ஒதுக்கப்பட்டு இந்தியா-துபாய் இடையே கடலுக்கு அடியில் போக்குவரத்து பாதை அமைக்கப்பட்டால் நிச்சயம் இது உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும்.

பின்னர் பல முக்கிய நகரங்களை இதேபோன்று இணைப்பதற்கான முயற்சிகளும் நடைபெறும். இந்த திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X